பாதுகாப்பு கோரி கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
தினமணி மதுரை மே 10, 2011
அமெரிக்கன் கல்லூரியில் வருவாயைக்கருத்தில் கொண்டு சினிமா படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பளிக்கக்கோரி மாணவர்கள் ஆட்சியர் உ.சகாயத்திடம் திங்கட்கிழமை மனு அளித்துள்ளனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிர்வாக ரீதியாக பிரச்னை எழுந்துள்ளது. முதல்வர் நியமனம் தொடர்பாக விதிமுறையை மீறி பேராயர் தரப்பினர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது(என்பது அனைவருக்கும் தெரிந்ததே!).
இந்நிலையில், பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தப்படுவதாகவும், இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிகை எழுந்துள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் மாணவப்பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
வகுப்பறைகள் திறக்கப்படவேண்டும்.
மாணவர்களுக்கான விடுதி உணவகம் திறக்கப்படவேண்டும்.
கடந்த பருவத்தேர்வு மதிபெண் பட்டியல் வழங்கவேண்டும்.
மரத்தடியில் பயிலும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிகைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
மாணவர்களிடம் கோரிகை மனுவைப் பெற்ற ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலம் உரிய நடவடிகை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆட்சியரைச் சந்தித்த குழுவில் கார்திக், விஜய், நாகூர்கனி, ராம், நவீனா, பிரின்ஸி, வள்ளிராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
ஷூட்டிங் நடத்த திட்டமா?
கல்லூரிக்குள் தற்போது பிரச்னை எழுந்துள்ள நிலையில், தமிழ் சினிமா படப்பிடிப்பை நடத்தவும், அதன் மூலம் வருவாய் பெறவும் ஒரு (ஆசீர்) தரப்பினர் செயல்பட்டு வருவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
மரத்தடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு இடையூறு செய்யும் வகையில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர் தரப்பு கூறுகிறது.
மேலும், ஆட்சியரிடம் மனுஅளிக்க வந்த மாணவர்கள் சிலருக்கு செல்போன் மூலம் மிரட்டல்விடுவதாகவும் கூறப்பட்டது. [இவ்வாறு மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டுவது பேராயர் கும்பலுக்கு வாடிக்கையாகிவிட்டது].
ஆட்சியருக்கு வி.எச்.பி. பாராட்டு:
இப்பிரச்னை குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்டத் தலைவர் சின்மயா சோமசிந்தரம் விடுத்துள்ள அறிக்கை:
அமெரிக்கன் கல்லூரி பிரச்னையை, வாக்குகளுக்காக அரசியல் பிரமுகர்கள்கூட கண்டுகொள்ளாத நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் சகாயம் சரியான நடவடிகை மேற்கொண்டு சினிமா படப்பிடிபை தடை செய்திருப்பது பாராட்டத்தக்கது.
கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சட்டரீதியாகவும், மாணவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிகை ஏற்படுதும் வகையிலும் ஆட்சியர் உ.சகாயம் செயல்பட்டிருப்பதை வரவேற்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment