






*
02.08.2008 அன்று மதுரையின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாசிவீதி - மேல மாசிவீதிகளின் சந்திப்பில் அமெரிக்கன் கல்லூரியின் மதுரை காமராசர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பு (MUTA), மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியரல்லாத அலுவலர் சங்கம்(TANSTAC) இணைந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது பொதுமக்கள் மத்தியில் கொடுக்கப் பட்ட விளக்கக் கைச்சீட்டுகளின் நகல்:
அன்புடையீர்,
பதிவாளர் அலுவலகத்தைப் பணத்தால் குளிப்பாட்டிப் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு நிர்வாகிகளை ஏமாற்றும் முயற்சியில் இறுதியாக இறங்கியுள்ள பேராயரின் தொடர் மோசடிகள் ...
1. ஏப்ரல் 12 மற்றும் 19 தேதிகளில் கல்லூரியை முறைகேடாகக் கைப்பற்ற மருமகன் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் ரவுடிகளை ஏவியதற்கு CB – CID விசாரணை கோரியும் …
2. உயர்நீதி மன்ற நீதிபதியின் தொடர் அமைதி முயற்சிகளை அலட்சியப்படுத்தி, சமாதான விரோதியாக செயல்பட்டு வரும் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரின் அணுகுமுறையைக் கண்டித்தும் …

3. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. ஜவகர் அவர்கள் முயற்சியில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையைக் கடைசி நேரத்தில் ஆணவத்தோடு நிராகரித்ததைக் கண்டித்தும் …
4. சி.எஸ்.ஐ. என்பதே தன் உயிர் மூச்சாகக் காண்பித்துக் கொண்டிருக்கும் பேராயர் ஆசீர், முதன்மைப் பேராயர் (மாடரேட்டர்) Most Rev. Gladstone அவர்கள் முன்வைத்த அமைதிப் பேச்சு வார்த்தையையே அவமதித்துப் புறக்கணித்ததைக் கண்டித்தும் …
5. மருமகன் தவமணி சில மாணவர்களுக்கும், சில பணியாளர்களுக்கும் பணம் கொடுத்து, முதல்வர் முனைவர் சின்னராஜ் மேல் PCR வழக்குகளைப் பதிவு செய்ததைக் கண்டித்தும் …

6. பொய்யான வதந்திகளை நாளும் பரப்பி திருச்சபை மக்களையும், கல்லூரி மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் பேராயரின் அற்பத்தனத்தைக் கண்டித்தும் …
7. அப்பாவி திருச்சபை மக்களின் காணிக்கைக் காசை வாரி இறைத்து எப்படியாவது மருமகன் தவமணி கிறிஸ்டோபரைப் பதவியில் உட்கார வைத்து கல்லூரியைச் சுரண்ட நினைக்கும் மாமனார், பிஷப் கிறிஸ்டோபர் ஆசீரின் பேராசையைக் கண்டித்தும் நடக்கும் …
… இந்த மாபெரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தாரீர்.
*

0 comments :
Post a Comment