Home » » Prof.Dr. S PREMSINGH'S SPEECH ...

Prof.Dr. S PREMSINGH'S SPEECH ...


*

*
*

*
5.12.08 அன்று நடந்த gatemeeting-ல் Dr.S.Premsingh (Member, C.S.I. Cathedral) Chemistry Lecturer “அமெரிக்கன் கல்லூரி – அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் பேசியதின் சுருக்கம்:


அது கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைச் சுரண்டி, இங்கிலாந்து மகாராணியின் காலடியில் படைத்து இன்பம் கண்ட காலம். மாறாக கிறிஸ்துவின் இறைத் தொண்டர்கள் சுயநலம் மறந்து, நம் நாடு வந்து, இந்தியரைச் சிகரமேற்ற கனவு கண்டு மருத்துவம் மற்றும் கல்வியில் தொண்டு செய்த காலம். அப்படி அவர்கள் கண்ட கனவுகளில் நமக்குக் கிடைத்த சில நல் முத்துக்கள்:

இன்று மதுரையின் வாகன நெரிசலிலும் அயராத அகண்ட கோரிப்பளையம் ஏ.வி.(ALBERT VICTOR) பாலம்.
அன்றைய மதுரை மாவட்டம் செழிக்க, தன் சொத்தையே விற்று பென்னி க்விக் கட்டிய பெரியாறு அணை.
இதற்கெல்லாம் மேலாக நம் அமெரிக்கன் கல்லூரி – சில மாணவர்களே இருந்த அக்காலத்திலேயே மைசூர் அரச மாளிகையைக் கட்டிய வல்லுனரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்ட நமது கல்லூரியின் மெயின் ஹால்.

ஆனால் இன்றோ அமெரிக்கன் கல்லூரியின் சுயநிதி வருமானத்தால் கவரப்பட்டு, கல்லூரியை 99 ஆண்டுகள் அடகு வைக்க, விற்கத் துடிக்கும் கயவர்கள். அவர்கள்தான் அமெரிக்கன் கல்லூரியின் சொந்தக்காரர்களாம். வேதனை!

இறையடியார்களின் கொடைமனத்தால் கடின உழைப்பால் உயர்ந்த நம் கல்லூரியைத் தன் குடும்பச் சொத்தாகப் பாவிக்கும், சுருட்டும் திருட்டுக் கூட்டம். இச்சூழ்நிலையில் எழுந்ததோர் கூட்டம். தம் 3T (Talent, Treasure, Time) தியாகம் செய்து கல்லூரியை வளர்த்த பெரியோர் வாஷ்பர்ன், ஜம்புரோ, டட்லி காட்டிய பாதையில் கல்லூரி ஊழியர் கூட்டம் …
எது வெற்றி பெறும்???

கல்லூரி C.S.I. சொத்தோ?

C.S.I. என்பது தென்னிந்தியத் திருச்சபை – தென் இந்தியாவின் கிறிஸ்துவர்களின் சபை. கிறிஸ்துவர்கள் (கிறிஸ்து + அவர்கள்) யார்? இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு, மன்னிப்பு, தியாகம் என்ற பாதையில் நடப்பவர்களே அன்றி அடாவடித்தனம், வெறித்தனம், சுருட்டல் செய்பவர்கள் அல்ல. சுயநலம் துறந்தவர்களேயன்றி, சுய நலவாதிகள் அல்ல. (பணம் மட்டும் ஒருவரைஅங்கத்தினர் ஆக்காது.)

*கல்லூரி C.S.I.-யை வளர்த்ததே தவிர C.S.I. கல்லூரியை வளர்க்கவில்லை.

*C.S.I. கல்லூரியில் இருந்ததே தவிர கல்லூரி C.S.I –ல் இருக்கவில்லை.

*கல்லூரிக்கு C.S.I.கடன்பட்டிருக்கிறதேயொழிய கல்லூரி C.S.I. –க்குக் கடன்படவில்லை.
C.S.I.-க்கு கல்லூரி, படித்த பிஷப்புகளையும் குருமார்களையும் அங்கத்தினர்களையும் உருவாக்கி பணமும் கொடுத்திருக்கிறதே தவிர, C.S.I. கல்லுரிக்கு ஒரு பைசா கூடக் கொடுத்ததில்லை.

பின்னும் ஏனிந்த குழப்பம்?

மெழுகுவர்த்தி எரிகிறது ….……….

அமெரிக்கன் கல்லூரியின் சிறப்பு candle light ceremony; அதிலும் வியப்பு “Lead Kindly Light” என்று மாணவர்கள் உணர்ந்து பாடும் பாடலால் வரும் உள்ளச் சிலிர்ப்பு.
மெழுகுவர்த்தி தியாகத்தின் எடுத்துக்காட்டு. இன்று இருண்ட இந்தச் சூழ்நிலையில் கல்லூரிஊழியர்களின் “3T” தியாகம் மெழுகுவர்த்தியாய் எரிந்து வெளிச்சம் தந்து கயவர்களை இனம் காட்டும்.

எரிவதனால் சிறிது வெப்பம் உருவாகலாம்; (இன்றைய) மாணவர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படலாம். ஆனால் பல மெழுகுவர்த்திகளின் புகை மேகத்தைச் சென்றடைந்து, கருவாகி, உருவாகி, மழை பொழியும்; அன்று இந்த வெப்பம் தணியும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை.

கடைசியாக .. அன்பர்களே,


காலங்கள் மாறலாம்
காட்சிகள் மாறலாம்
ஆட்சிகள் மாறலாம்
ஆட்களும் மாறலாம்
ஆனால்
ஆண்டவர் (இறைவன்) மாறுவதில்லை.


நீதியரசர்கள் தங்களுடைய தீர்ப்பை மாற்றலாம். ஆனால் நீதியின் சூரியன் (இயேசுகிறிஸ்து) தன் நியாயத்தீர்ப்பின் நாளில் இவர்களை நியாயத்தால் நிறுத்துவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.


*
Thanks for reading Prof.Dr. S PREMSINGH'S SPEECH ...

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment