*
போலி ஆவணம் தயாரித்ததாக புகார்;
பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு
மதுரை, பிப். 18: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் உட்பட 2 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை பழங்கானத்தத்தை சேர்ந்த தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த போது, பசுமலை சி.எஸ்.ஐ. சபை நிர்வாகக் குழு தேர்தல் முறை கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்தேன். இதனால் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் என் மீது விரோதம் கொண்டார். என்னை ராமநாதபுரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனை தூண்டி விட்டு, பிஷப் எனக்கு தொல்லை கொடுத்தார்.
எனக்கு 22 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சேமநல நிதியிலிருந்து மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க விடவில்லை. 6-வது ஊதியக் குழு பாக்கி தொகையும் வட்டிப் பணமும் கிடைக்க விடாமல் செய்து விட்டனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் என் கையெழுத்தை அழித்தும், திருத்தியும் மோசடியாக போலி ஆவணம் தயாரித்து நஷ்டம் ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், பிஷப் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் தேவராஜ் அதிசயராஜ் மனுத்தாக்கல் செய்தார்.
தேவராஜின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பிஷப் கிறீஸ்டோபர் ஆசீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.
*
Home
»
»
தினகரனில் இன்று (பிப்.18) வந்த செய்தி.
தினகரனில் இன்று (பிப்.18) வந்த செய்தி.
Unknown
08:58
Thanks for reading
தினகரனில் இன்று (பிப்.18) வந்த செய்தி.
« Previous
« Prev Post
« Prev Post
Next »
Next Post »
Next Post »
0 comments :
Post a Comment