தினமணி மதுரை மார்ச 10
அமெரிக்கன கல்லூரி பிரச்னையைத் தீர்க்க அரசு அமைத்த குழுவின் விசாரணையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், பேராசிரியர்க்ள் உண்ணாவிரத்தை வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
மதுரையில் பாரம்பரியமிக்க அமெரிக்கன கல்லூரியில் முதல்வர் நியமணத்தில் பிரச்னை எழுந்துள்ளது. கல்லூரியின் விதிமுறைப்படி, கல்லூரி முதல்வரை நியமிக்கவேண்டும் என கல்லூரியின் முன்னாள் முதல்வரும் செயலருமான சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் தரப்பினர் கோருகின்றனர்.
ஆனால், கல்லூரி விதிமுறைகளுக்கு மாறாக பேராயர் தரப்பினர், கல்லூரி இயக்குனரகத் துணையுடன் கல்லூரி மமதல்வர் அறையைஇ ஆக்கிரமித்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இப்பிரச்னையைத் தீர்க்கக் கோரி கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சாலமன் பாப்பையா விடுத்த கோரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
உயர்மட்டக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில், அக்குழு விசாரணை நடைபெறவில்லை. மேலும், கல்லூரிக்குள் வெள்யாள்களை நடமாடவும் பேராயர் தரப்பினர் அனுமதிபதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, பல மாதங்களாக பேராசிரியர்களும், மாணவர்களும் நியாயம் கோரி போரடிவருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை திடீரென கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், உண்ணாவிரதத்தையும் தொடங்கினர். இதில் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திலிருந்து பேராயர் தரப்பினர் விலகவேண்டும், பழைய நிலையில் கல்லூரி விதிமுறைப்படி சுமூகமாக பாடம் நடத்தப்படவேண்டும், அதற்கு உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் எனக் கோரினர்.
0 comments :
Post a Comment