Home » » தொடரும் வன்முறைகள் . . . .

தொடரும் வன்முறைகள் . . . .

30-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அமெரிக்கன் கல்லூரி canteenல் முறையற்ற முதல்வர் தவமணியால் ரொளடிகளாக பயன்படுத்தப்பட்ட மாணவர் கோஷ்டியைச் சார்ந்த James (B. Com மாணவர்) மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் செந்தில் குமார் (II M.A. English) எனும் மாணவர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தினர். அவர் சிகிட்சைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Canteenனிலிருந்த சேர்கள் மற்றும் கண்ணாடி அலமாரி, பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன.அடிபிடித்தகராறில் சிந்தப்பட்ட இரத்தம் canteen முழுவதும் அள்ளித்தெளிக்கப்பட்டிருந்தது கோரமாகக்காட்சியளித்தது.
இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காயமுற்ற மாணவர் செந்தில் குமாரின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி எந்த நாளேடுகளிலும் வராமல் இருந்தது ஆச்சரியமளிக்கின்றது.
Thanks for reading தொடரும் வன்முறைகள் . . . .

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment