The late Bishop Asir's son-in-law Davamani was hastily 'appointed' as Principal of The American College by none other than his own father-in-law in December 2011 by dethroning the predecessor (literally kicking him out) the Illegal 'acting-principal' Mohan, even before he could officially retire.
The Tamil Nadu government through its Regional Joint Director of Collegiate Education has been disbursing the salary for all the Aided Staff of the College after the judgement of Honorable Justice Chandru. According to the Tamil Nadu Government and the High Court, there is NO Principal & Secretary in the American College.
Davamani, is still illegally occupying the office of the Principal & Secretary of The American College without an Order from either the Government or from the Court. Under his 'maladministration' the college has become totally an unsafe place with frequent bursts of violence. Recently he has been involving in giving 'false police complaints' and make it to appear in certain Tamil daily news papers - misleading the public and to protect the rowdy elements he has planted in the college.
மதிப்பிற்குரிய தினமணி / தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு,
தங்கள் இதழில் சமீபகாலமாக ‘அமெரிக்கன் கல்லூரி’ தொடர்பாக வெளிவரும் செய்திகள், செய்திகளா? இல்லை விளம்பரங்களா? என்று பிரித்தறிய முடியாத வண்ணம் காணப்படுகின்றன. மார்ச் 22, 2012 செய்தித்தாளில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சொன்னதாக ஒரு நீண்ட செய்தி வெளிவந்தது. அது மூன்றாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும், ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 80திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15மாதங்களுக்கும் மேலாக ஊதியம் இல்லாமல் வெளியில் இருக்கிறார்கள். தமிழ், விலங்கியல், தாவரவியல், இயற்பியல்(சுய நிதி), காட்சி ஊடகத்துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகள் எழுத முடியாமலும், எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற முடியாமலும் இருக்கிறார்கள். இந்நிலையில் மறைந்த திருச்சபை கொள்ளையர் கிறிஸ்டோபர் ஆசிரின் மருமகன் தன்னைத்தானே வடிவேல் பாணியில் ‘நாந்தான் ரவுடி.. நாந்தான் ரவுடி..’ என்பது போல் ‘நாந்தான் முதல்வர் நான் தான் முதல்வர்’ என்று கூறிக்கொண்டு திரிகிறார்.
1.அவரை முதல்வராக நியமித்த ஆட்சிக்குழு சட்டப்படி சரியானதா இல்லையா? என்பது வழக்கு மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
2.அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக உறுப்பினர் டாக்டர்.பெருமாள், இது முறைகேடான நியமனம் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்.
3.மருமகன் தவமணி கிறிஸ்டோபரின் முதல்வருக்கான கல்வித்தகுதிக்கான அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4.+2வில் கணிதத்தில் தேர்ச்சிபெறாத கணிதமேதையான தவமணியின் பி.எச்.டி., பட்டம் மோசடியானது மட்டுமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்ததில் எந்த யூ.ஜி.சி., விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமனறத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
5.தன்னை முதல்வர் என்று அறிவித்துக் கொண்டுள்ள தவமணி, தற்போது கணிதத் துறையின் பேரேட்டில் 6வதாக இணைப் பேராசிரியர் என்ற இட்த்தில் கையொப்பம் இட்டு, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பொறுப்பில்தான் தன்னுடைய ஊதியத்தை சமர்த்தாகப் பெற்றுவருகிறார். அவருக்கே விடுப்பு வேண்டுமென்றால் இணை இயக்குநர். திருமதி.பொன்னாத்தாள் அவர்களுக்குத்தான் அனுப்பியாக வேண்டும்.
நிலமை இப்படியிருக்க உங்கள் செய்தியாளர் அவரை முதல்வராக்க் அங்கீகரித்து அவர் கொடுக்கின்ற செய்திகளை அப்படியே வழங்கிவருவது தற்செயலானது அல்ல. வழக்கமாக தினமலர் செய்தியாளர்கள் இத்தகைய செய்திகளை எழுதுவது வழக்கம். அதைக்கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைவதில்லை. காரணம் தினமலர் நிருபர்கள் ஊதியத்தையே இப்படித்தான் பெற்றுவருகிறார்கள். தினமலர் நிர்வாகமே இதை ஊக்குவிக்கக் கூடியது என்பது மக்கள் அறிந்ததுதான். (கூடங்குளம் விசயத்தில் தினமலரின் அறுவறுப்பான அணுகுமுறையே அவர்களின் பத்திரிக்கை தர்மத்திற்கு ஒரு துளி) ஆனால் தினமனி லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல. அதற்கென்று நீண்ட பாரம்பரியம் உண்டு. அதே போன்ற பாரம்பரியம் அமெரிக்கன் கல்லூரிக்கும் உண்டு. இத்தகைய தமிழகத்தின் முன்னோடி நிறுவனம், தவமணி போன்ற தகுதியற்ற நபர்களால் கொள்ளை போகும்போது, அதை காத்து மக்கள் சொத்தாக்க வேண்டிய கடமை தினமனிக்கு உண்டல்லவா? அதை கடந்த காலங்களில் தினமனி செய்தது என்பதும் உண்மைதான். ஆனால் தற்போதைய செய்தியாளர், தொடர்ந்து பேராயர் மருமகனிடம் கையூட்டு பெறுகிறார் என்பதற்கு நேற்றைய செய்தியை உங்களுக்கு உதாரணமாக காட்டவிரும்புகிறேன்.
போலி முதல்வர் தவம்ணி, மாணவர் சிலரை அடியாட்களாக வைத்து, ஆசிரியர்களை மிரட்டுதல், மாணவிகளை இழிவுபடுத்துதல், சகமாணவர்களை தாக்குதல் என்று அடியாள் ராஜ்ஜியம் நடத்திவருகிறார். அது பற்றிய பல புகார்களை காவல்துறைக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. காரணத்தை தனியாக உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை.
5.04.12 அன்று ஒரு மாணவர் தாக்கப்பட்டதாகவும், அதற்கான புகாரை கமிஷனர்க்கு மாணவர்கள் வழங்கியதாகவுமான ஒரு செய்திதான் அது. விசயம் என்னவென்றால் சென்றவாரம் போலிமுதல்வரின் ரவுடிகள் ஆங்கிலத்துறை மாணவர் ஒருவரை கல்லூரி காண்டீனில் வைத்து தாக்கி, ரத்தகாயங்களோடு அரசுமருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை திசைதிருப்ப தல்லாகுளம் காவல்நிலைய சட்டக் காவலர்களும் தவமணியும் இணைந்து, ஒரு மாண்வர் தாக்கப்பட்டதாகவும் இரண்டு ஆசிரியர்கள்( ஒருவர் வணிகவியல் துறைத்தலைவர். மதுரை பல்கலைக்கழக டீனாக இருந்த டாக்டர்.டேவிட் அமிர்தராஜன், இன்னொருவர் தத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர். அருள் அரசு. இருவரும் 25 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உள்ளவர்கள்) ஒரு மாணவர் சேர்ந்து தாக்கியதாக ஒரு போலிபுகாரை உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தினமனி செய்தியாளரும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் போல், பாரம்பரியமிக்க நிறுவனங்களை உங்கள் செய்தியாளர்போல், எங்கள் பிசப் மருமகன் போல் சில விரியன் பாம்புகள் பாழ்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாதல்லவா? ஆகவே தொடரும் எங்கள் தார்மீகப் போராட்டத்தை உங்கள் வளையாத எழுதுகோலால் தாங்குவீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி
அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்புக்குழு
மதுரை.
0 comments :
Post a Comment