Home » » ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்

ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்

அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நகர் முரசு, மதுரை, ஜன 6:

மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர்களும், அலுவலர்களும், ஊழியர்களும் கல்லூரி வளாகத்தினுள் தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஜனவரி 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி ஆட்சிக்குழுவின் பேராசிரியர்கள் பிரதிநிதி, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜான் சேகர் தலைமை வகித்தார்.

பின்னர் அவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் பேராசிரியர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவரால் நியமிக்கப்பட்ட முதல்வர் பேராசிரியர் அன்புதுரை தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

சாதி, மதம், பணபலத்தின் செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரியின் விதிமுறைகளுக்கு மாறாக மோகன் கல்லூரி கல்வி துறையால் கல்லூரிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரியின் சட்டதிட்ட விதிகள் படி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்புதுரை முதல்வர் பதவியில் நீடிக்கவும் கல்லூரி சுமூகமாக நடைபெறவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 2008ம் ஆண்டு நடந்து கொண்டதைப்போன்றே 2010 டிசம்பர் 10ம் தேதியன்று அடியாட்களுடன் பூட்டை உடைத்து முதல்வர் அறை, அலுவலகம், ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ளது குறித்து தல்லாகுளம் காவல் னிலையத்தில் புகார் கொடுத்து இதுவரை வழக்குப்பதிவு உட்பட் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, உடனே இதுகுறித்து நடவடிக்கைக்கு உத்தரவிடவேண்டும்.

கல்லூரிக்குள் இருக்கும் ரவுடிகள் மற்றும் வெளியாட்களை கல்லூரியிலிருந்து வெளியேற்றவும், கல்லூரி திறந்து வகுப்புகள் சுமூகமாக நடைபெறவும், மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.

இத்தகைய குழப்பத்திற்கும், பிரச்சனை உருவாவதற்கும் மூலகாரனமாக மோகனை சட்டவிதிகளுக்குப் புறம்பாக கல்லூரி முதல்வராக கல்லூரி கல்வி இயக்குனர் உமாராணி உத்தரவு பிறப்பித்தது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாரும், பேராசிரியர் ஜான் சேகரும் தெரிவித்தனர்.

விடுமுறை முடிந்து கல்லூரி நேற்று திறக்கப்படும் என (போலி) நிர்வாகம் அறிவித்தது. கல்லூரிக்கு போலிஸ் பாதுகாப்புக் கோரி கலெக்டர் காமராஜ் போலிஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் மனுகொடுத்தார்.

இதன் அடிப்படையில் தல்லாகுளம் போலிஸ் உதவி கமிஷனர் சண்முகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சிதம்பர முருகேசன், பாலக்குமார், சாட்சிகள் ஜெகதீஷ்குமார், தலைமையில் கல்லூரி வளாகத்தில் போலிசார் குவிக்கப்பட்டனர்.

கல்லூரி வந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், தீவிர விசாரணைக்குப் பின்னர் அடையாள காண்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் முதல்வராக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர், பேராசிரியைகள், அலுவலர்கள், அவரது ஆதரவாளர்கள் கல்லூரி வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மறியலில் ஈடுபடலாம் என்ற நிலை நிலவியதால் ஆர்.டி.ஓ சுகுமாறன், மதுரை தெற்கு தாசில்தார் கமலசேகரன், வி.ஏ.ஓ பெருமாள் தலைமையில் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போரடுவோம் என அவர்கள் கூறினர்.


Thanks for reading ஐந்து அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment