Home » » அமெரிக்கன் கல்லூரி விடுமுறை நீட்டிப்பு: வெளி ஆள்கள் தங்கியுள்ளதாகப் புகார்

அமெரிக்கன் கல்லூரி விடுமுறை நீட்டிப்பு: வெளி ஆள்கள் தங்கியுள்ளதாகப் புகார்

தினமணி மதுரை, ஜன 03


மதுரை, ஜன. 2: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி வளாகத்துக்குள் கல்லூரிக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவர்கள் தங்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பும் கல்லூரியில் கூடுதலாக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரம்பரியமிக்க அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர், செயலராக இருந்த சின்னராஜ் ஜோசப் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குதலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மேலும், கல்லூரியின் உதவி முதல்வராக உள்ள பேராசிரியர் பி.ஆர்.அன்புதுரை தற்போது முதல்வர் பொறுப்பை வகித்து வருகிறார். இதை பேராயர் தரப்பினர் ஏற்காததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் அறையை போலீஸ் உதவியுடன் கல்லூரி விதிமுறையை மீறி சிலர் ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த சில நாள்களாக கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை (ஜனவரி 3) திறக்கப்படவிருந்த நிலையில் திடீரென கல்லூரி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர், செயலர் பொறுப்பு வகிக்கும் பி.ஆர்.அன்புதுரை அறிவித்துள்ளார்.

நாலாயிரம் மாணவ, மாணவியர் பயிலும் கல்லூரியின் செயல்பாட்டை முடக்கும் வகையில் செயல்படுவோரை அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனைக் காக்க முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thanks for reading அமெரிக்கன் கல்லூரி விடுமுறை நீட்டிப்பு: வெளி ஆள்கள் தங்கியுள்ளதாகப் புகார்

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment