அமெரிக்கன் கல்லூரியினை கோரிப்பாளையம் பகுதிக்குக் கொண்டுவந்து, தனது சொந்தப் பணத்தின் துணையுடன் கல்லூரி கட்டடங்களைக்கட்டியவர் இறையடியார் ஜம்ரோ அவர்கள். அவர் முதலாவதாகக் கட்டிய Main Hall திறப்பு விழாவிலே அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது “இந்தக் கல்லூரி மதுரையுடன் வளரவேண்டும், மதுரை இந்தக் கல்லூரியுடன் வளரவேண்டும். இது மதுரை மக்களின் கல்லூரி ” என்பது!
ஆகவே, மதுரை வாழ் மக்களே. . . . உங்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. .
1800களின் இறுதியில், மதுரை கிராமமாக இருந்தது. கல்வி என்பது அனைவருக்கும்த் கிடைக்காததாய் இருந்தது. குறிப்பிட்ட வர்க்கத்தினரும், சாதினரும் கல்வி பயின்று வந்தனர். கல்வி என்பது மனிதர் அனைவருக்கும் பொதுவானது, இன்றியமையாதது, வாழ்வைக் கற்று தருவது. கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும், பயில வேண்டும் என்ற நன்னோக்கில் அக்கல்லூரி எழுப்பப்பட்டது. அக்கல்லூரி, மதுரையின் அடையாளமானது. அக்கல்லூரிக்காக, மாணவர்களின் படிப்பிற்காக, மதுரையின் முதல் பாலம் கட்டப்பட்டது. அன்று முதல், கடந்த 125 ஆண்டுகளாக, அக்கல்லூரியின் புகழ், கல்வி மூலம் பரவிக் கிடக்கின்றது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, அக்கல்லூரியில் படிப்பது என்பது, மதுரை மற்றும் தென் மாவட்ட மாணவர்களின் கனவாக இருந்ததது. அக்கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது சிரமமானது. விஞ்ஞானிகள், தலைவர்கள், இந்திய ஆட்சித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு முக்கிய மனிதர்களை, அக்கல்லூரி மனித சமுதாயத்திற்கு தந்துள்ளது. அக்கல்லூரியின் அடையாளமும், அங்கீகாரமும் கடல் கடந்தும், வான் கடந்தும் நிலை நாட்டப் பட்டுள்ளது.
அக்கல்லூரி, மதுரையின் இதயத்தில் அமைந்துள்ளது. 2000 இல், அக்கல்லூரி அமைந்திருக்கும் இடம் வர்த்தக கும்பலால் கவனிக்கப் பட்டது. அக்கும்பல் அதை எவ்வாறு வளைக்கலாம் என்று திட்டம் போட்டது. அக்கும்பலின் நய வஞ்சகதிற்கும், பணத்திற்கும், பலத்திற்கும் கருங்காலிகள் சிலர் பலியாக ஆரம்பித்தனர் . சிலர் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் கல்லூரியை விற்க வேண்டும் என்ற உண்மை நிலையை கல்லூரி ஆசிரியர்களிடம் கூறினர். மக்களின் கல்வியை விட, அவர்களுக்கு பணமே பிரதானமாய் இருந்தது. சின்னராஜ் ஜோசப் மற்றும் பல நல்ல பேராசியர்களும் மற்றும் மாணவர்களும் அக்கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், அவர்கள் மக்களுக்கு தான் கல்லூரி என்றனர்.
கல்லூரி இடத்தை வளைக்க அக்கும்பல் காவல்துறை, அரசியல் மற்றும் அரசு துறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது. சின்னராஜ் ஜோசப் மற்றும் அவர்களுடன் உள்ள நல்ல பேராசிரியர்கள், மாணவர்களும்,என்ன அநியாயம் நடந்தாலும், கல்லூரியை ஆக்ரமிக்க முடியாதபடி தடுத்தனர். போராடினார். போராடிக்கொண்டே இருக்கின்றனர்.
போராட்டம், வெறுப்பு இவற்றைக் கண்ட மக்களிடையே, மாணவரிடையே அக்கல்லூரி மேல் இருந்த மதிப்பு. 2008 பிரச்னைகளுக்கு பிறகு குறைய ஆரம்பித்தது. 2008 ஆம் ஆண்டு வரை, மதுரையின் சிறந்த கல்லூரியாய், அக்கல்லூரி இருந்ததது. அக்கல்லூரிப் பற்றி செய்தி தாள்களும், பத்திரிக்கைகளும் உண்மை நிலையையோ, நியாய நிலையையோ தெரிவிக்க வில்லை, மக்கள் குழப்பமுற்றனர். 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு, மாணவர் சேர்க்கைக் குறைய ஆரம்பித்தது. மாணவர்கள் அக்கல்லூரிப் பற்றி தவறான எண்ணத்தில் சிந்திக்க ஆரம்பித்தனர்.
2009 , 2010 சேர்க்கைக்கான மாணவர் விண்ணப்பங்கள் குறைய ஆரம்பித்தன.
2010 -2011 இறுதி ஆண்டு மாணவர்களின் கதி என்ன என்பதே தற்பொழுது தெரியவில்லை?
கல்லூரியின் பழமை, பெருமை அறிந்த பலரே அக்கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரைப்பது இல்லை. கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், பலரும் அக்கல்லூரியில் சேர்வதற்கு பரிந்துரைப்பது இல்லை.
கல்லூரியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசிக்க வேண்டும்.
2011 ஜூன் கல்வி ஆண்டில் யார் விண்ணப்பிபார்கள்?
ஏப்ரல் மாதத்திற்குள், நம் கல்லூரி போராட்டம் வெற்றி பெற வேண்டும்?
கல்லூரி மீண்டும் செயல்பட மாணவர்கள் வேண்டும். அடுத்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நம் போராட்டம் வெற்றி பெறவும், கல்லூரி பெருமையை நிலை நாட்டவும், வரும் கல்வி ஆண்டில் கல்வி பயில்வதற்கு மாணவர்கள் வேண்டும்.
தன்னலமற்ற அமெரிக்கர்களால் உருவாக்கப் பட்ட கல்லூரியை, தன்னலமே பிரதானமாய் கொண்ட ஈன பிறவிகளிடம் காப்பாற்ற வேண்டும்.
நண்பர்களே! வரும் கல்வி ஆண்டில், மாணவர்கள் அதிகம் வரவில்லை என்றால், அக்கும்பல் கல்லூரியின் நிலத்தை விலை பேசினாலும் ஆக்ரமித்தாலும் ஆச்சர்யம் இல்லை.
நம் கண்முன் இருப்பது எல்லாம், எவ்வாறு அமெரிக்கன் கல்லூரிக்கு மாணவர்களை சேர்ப்பது என்பதும், எவ்வாறு இதை மக்களிடம் பரப்புவது என்பதும் மட்டுமே !
இச்செய்தியை பரப்புங்கள்!
காற்றிலும், வானிலும் !
எங்கும் எதிலும்!
எல்லோர் மனத்திலும்!
Posted by மனம் கொண்டவன்
Home
»
»
அமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்?
Unknown
18:27
Thanks for reading
அமெரிக்கன் கல்லூரி - நாம் என்ன செய்ய வேண்டும்?
« Previous
« Prev Post
« Prev Post
Next »
Next Post »
Next Post »
0 comments :
Post a Comment