Thinamani 06 Apr 2011
மதுரை,ஏப். 5: மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசு நியமித்த உயர்நிலைக் குழு ஏப்.18-ல் மதுரை வருவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேலு தாக்கல் செய்த மனு:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மொழிப் பாடத்துக்கு ஆசிரியரின்றி ஒரு மாதமாக பாடம் நடத்தவில்லை. இதுகுறித்து கல்லூரி முதல்வர், உயர் கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கல்லூரி முதல்வர் மோகன் (பொறுப்பு) தாக்கல் செய்த பதில் மனுவில், கல்லூரியில் கணிதவியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மொழிப் பாடத்துக்கும் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இனிமேல் வகுப்புகள் தடையின்றி நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். (எப்போதிருந்து நடைபெறும்? நியமிக்கப்பட்ட்ட ஆசிரியர்கள் தகுதியானவர்களா? 80% ஆசிரியர்கள் வேலைக்கு வரும்போது கணிதவியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மொழிப் பாடத்துக்கும் விரிவுரையாளர்கள் தேவையா? மோகன் பொய் சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் பொய்யே இங்கு மோகனாக அல்லவா மாறிவிட்டது!)
அக்கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்லூரியில் நடந்த பல்வேறு விரும்பத் தகாத சம்பவங்களால் மாணவ, மாணவியர் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், தமிழக அரசு உயர்நிலைக் குழுவை 18.2.2011-ல் அமைத்தது. இக்குழு விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்றுக்கொண்டார் நீதிபதி.
அரசின் உயர் நிலைக் குழு ஏப்ரல் 18-ம் தேதி மதுரை வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி இரு மனுக்களையும் பைசல் செய்தார்.
* items in brackets added by blogger
0 comments :
Post a Comment