தலைமைச் செயலரிடம் மனு
மதுரை, தினமணி பிப்: 18 வெள்ளிக்கிழமை
மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தலைமைச் செயலரிடம் அக்கல்லூரி ஆசிரியர்கள் வியாழக்கிழமை மனு கொடுத்தனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக கல்லூரி இயங்காமல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாலர்கள் 20 பேர், தமிழக தலைமைச் செயலர் எஸ்.மாலதியை வியாழக்கிழமை சந்தித்து மனு கொடுத்தனர்.
அமெரிக்கன் கல்லூரி 2 மாதங்களாக இயங்காமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழக அரசு தலையிட்டு விரைவில் தீர்வுகாண வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment