அரசுக் குழுவினர் காலதாமதமின்றி விசாரணையைத் தொடங்க வலியுறுத்தி மறியல் செய்த இந்திய மாணவர் சங்கத்தினர் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக தமிழக அரசு தலைமைச் செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு விசாரணையை விரைந்து தொடங்க வேண்டும் என பேராசிரியர்கள் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் சங்க மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிடுவதற்காக திங்கள்கிழமை காலை கல்லூரியை நோக்கிச் சென்றனர். இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜெ.லெனின் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஜோ.ராஜ்மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலர் ஆர்.வேல்முருகன், மாவட்டத் தலைவர்கள் ஆர்.பாண்டி, எம்.கண்னன் உள்ளிட்டவர்கள் சென்றனர். கல்லூரி முன் சென்றதும் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீஸôர் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
0 comments :
Post a Comment