தினமணி மதுரை மார்ச் 13
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கச்செய்யும் நிர்வாகப்பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி அந்தக் கல்லூரி மாணவர்கள் சிலர் 4-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை உண்ணவிரதம் மேற்கொண்டனர்.
அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் நியமனம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்பதற்காக தமிழக அரசு ஒரு உயர்நிலைக்குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவினர் இதுகுறித்து விசாரணையை இன்னும் தொடங்கவில்லை.
குழுவினர் விரைவில் விசாரணையைத் தொடங்கக் கோரி இந்தக் கல்லூரியின் மாணவ, மாணவியர் சிலர் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் 4-வது நாளாக முதுகலை மாணவர் விஜய் தலைமையில் சுமார் 10 பெண்கள் உட்பட 25 பேர் உண்ணவிரதம் மேற்கொண்டனர். இதயொட்டி, கல்லூரி வளாகத்தில் தல்லாகுளம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுருந்தனர்.
0 comments :
Post a Comment