Home » » ஏனோ இந்த ‘மாய்மாலம்’? ... Prof. RAJENDRA PANDIAN

ஏனோ இந்த ‘மாய்மாலம்’? ... Prof. RAJENDRA PANDIAN

*


'பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது' என்ற  கலிலியோவின் கருத்தை ஏற்று  1992-ல் போப்பாண்டவர்  அறிக்கை விட்ட  கதையாக அமெரிக்கன் கல்லூரியின் ‘பாரம்பர்யம்’ மற்றும் ‘தனித்துவம்’ குறித்து அறிவர். சுதானந்தா தன் தேதியில்லாத மடல்களில்  சொல்லும் விஷயங்கள் சில யுகங்கள் தாமதமாக வந்த போதிலும் ஏற்புடையதே..

அதிலும், ஏனோ  இந்த மாய்மாலம்? "முன் எப்போதும் இல்லாத பிரச்னைகள் அண்மைக்காலத்தில்  முளைத்திருக்கின்றன"  என்று நீங்கள் பீடிகைப்பதன் பொருள் என்ன?  நீங்களாக ஏன் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கிறீர்கள்? இப்பிரச்னைகள் இன்று நேற்று முளைத்தவை அல்ல; நாள்ப் பட்டவை. பலநாள் உள்ளிருந்து மெல்லத் தலை காட்டும் புற்றுநோய் போன்றவை. அதை வளர்த்து விட்டதில் உங்கள் பங்கு உங்களுக்குத்  தெரியாதா  என்ன!

முந்தையக்  கடிதத்தில் இந்த பிஷப் உங்கள் நிர்வாகத்தில் தலையிட்டதில்லை என்று சொல்லியிருந்தீர்களே. அப்படியா?

இன்றைய  பிஷப்  அன்றைய Bishop-in-line என்று கேள்விப் பட்டதுமே பட்டங்களும் பதவிகளும் 'மருமகனைத்' தேடி ஓடினவே. "நாலு வார்த்தை சேர்ந்தாற்போல்  நீயும் பேசு பார்க்கலாம்" என்று வாசலில் ஒலிக்கும் கோஷத்திற்குரியவரான அவர் International Scholar-ஆகி  இக்கலூரியின் பிரதிநிதியாக அமெரிக்கா சென்று வந்தது யார் நிர்வாகத்தில்?

அதே சூட்டில் ஆசிரியர் கூட்டத்தில் " I am happy to announce that Mr.Davamani Christopher has been been appointed Warden of Zumbro Hall" என்று சொல்வதற்குப் பதிலாக " I am happy to announce that Mr. Christopher Asir has been been appointed Warden of Zumbro Hall" என்று  பொறுப்பு முதல்வர் சொன்னதுமே ‘slip of the mind’ என்று சிரிப்பொலி எழுந்ததே [அதே கூட்டத்தில்தான் நீங்கள்  கல்லூரிக்கு நிதி திரட்டுவதாக சொல்லிக்கொண்டு அமெரிக்கா சென்றிருக்க பொறுப்பு முதல்வரோ  நீங்கள் சொந்த வேலையாகச் சென்றுள்ளதாக அறிவித்தது தனி காமெடி.

இப்படி மாமனில் மருமகனையும்; மருமகனில் மாமனையும்; பார்த்துப் பரவசமடைந்த நீங்கள்  எந்தச் சக்தியால்  ஏவப்பட்டு AC School-க்கு ஒரு லட்ச ருபாய் ஒதுக்கித் தீர்மானம் [Re.No.7(a.i.)/March/2006] போட்டீர்கள்? மேலெழுந்த  பார்வைக்கு இதெல்லாம் ஒன்றுமில்லாதவையாகக்  கூடத் தோன்றலாம்--தேமலாகத் தெரியும் தொழுநோய் போல! அடுத்து வந்த நிர்வாகம் செய்த தவறுகளோடு ஒப்பிட்டு உங்களை நீங்களே பாராட்டியும் கூட மகிழலாம். ஆனால் தவறான  வழியில் நீங்கள் போட்ட 'கோடு' பின் 'ரோடாகி' இக்கல்லூரியை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் அடிமை முறையைக்  கண்டு " நான் இப்படியொரு அமெரிக்காவைக் காண இங்கு வரவில்லை" என்று  மனம்  குமுறிய சார்ல்ஸ் டிக்கன்ஸ்  அதற்கெதிரான ‘உள் நாட்டுப்  போர்’ உக்கிரமடைந்த   நிலையில், ஐரோப்பிய அறிவுஜீவிகளின் தார்மீக ஆதரவு  கோரி அதிபர் லிங்கன் விடுத்த அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை. பாவம்! தெற்கு மாகாணங்களை ஆதரிக்கும் விக்டோரியா மகாராணியின் கோபத்திற்கு ஆளாக அவருக்கு விருப்பமில்லை. அதுபோல, தொட்டதற்கெல்லாம் கல்லூரியின்  வரலாறு பற்றிப் 'பிளிரும்' நீங்கள் வரலாறு காணாத போராட்டத்தை  அது சந்திக்கக நேர்ந்த போது எங்கே போனீர்கள்?

இப்படித் ‘திடும்’மென  வந்து எப்படிக் "கருத்து கந்தசாமி" போல் பேசுகிறீர்கள்? "தீர்வு" என்று என்னதான்  சொல்ல வருகிறீர்கள்? நீங்கள் சொல்லும்: 1. கல்லூரியின் பாரம்பர்யம் தொடர என்னென்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்வது ; 2. கல்லூரியின் தனித்தன்மைக்காக இறைவனிடம் வேண்டுவது; 3.  திருச்சபையின் தலையீடு இல்லாமல் இருக்க இறைவனிடம் வேண்டுவது; 4. அனைவரும் ஒன்று படுவது-- என்பதன் அர்த்தம் என்ன?   சற்றுப் புரியும்படித்தான் கூறுங்களேன். பிரச்னையின் புல-கன-பரிமானம் உணர்ந்ததுதான் பேசுகிறீர்களா?  ‘வாஷ்பன் கேட் வே’யில் நடப்பதுவும் கூட  ஒரு 'ஸ்டாலின் கிராடு சமர்'தான் என்பது உங்களுக்கு விளங்குகிறதா? ஏதோ  பொம்மைக்காக அடித்துக் கொள்ளும் குழந்தைகளிடம்  அப்பாக்காரர்  'ஓய்! சத்தம்போடாம விளையாடுங்க' என்பது போல் அல்லவா   சொல்லிவிட்டீர்கள்!

"அனைவரும்ஒன்றுபடுவது"  என்பதைத்தான்அனைவரும்  விரும்புகிறோம்; எதிபார்க்கிறோம். ஆனால் அதை இக்கலூரியின் இறையாண்மை, சுதந்திரம், பாரம்பர்யம், தனித்துவம் இவற்றை இழக்காமல் அடைவதற்கு தெளிவான செயல் திட்டம் ஏதேனும் உங்களிடம் இருந்தால் சுற்றி வளைக்காமல் சொல்லுங்கள். வருங்காலம் உங்களை வாழ்த்தும், வணங்கும்.
Thanks for reading ஏனோ இந்த ‘மாய்மாலம்’? ... Prof. RAJENDRA PANDIAN

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment