Home » » Christopher Asir Dead

Christopher Asir Dead

கிறிஸ்டோபர் ஆசீர் மரணம்: நாளை உடல் அடக்கம்
Malai malar dated 3.2.2012

மதுரை-ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் மரணம்: நாளை உடல் அடக்கம்


மதுரை - ராமநாதபுரம் திருமண்டல சி.எஸ்.. பேராயர் டாக்டர் கிறிஸ்டோபர் ஆசீர் (வயது 64) கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பு மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு அதிக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (3.2.2012) அதிகாலை 3 மணி அளவில் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் மரணம் அடைந்தார்.  

பின்னர் அவரது உடல் மதுரை சின்ன சொக்கிகுளம் பேராயர் இல்லம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கிறிஸ்தவ போதகர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திருமண்டல பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், சபை போதகர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  

மரணம் அடைந்த கிறிஸ்டோபர் ஆசீர் 5.12.1947-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளையில் பிறந்தார். அவரது தந்தை ஆசீர்வாதம் நாடார். 30 வயதிலேயே பேராயர் பணிக்கு வந்தார்.

திண்டுக்கல், கன்னிவாடி, வேடசந்தூர், மதுரை சாந்திநகர் ஆகிய தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். நாளை காலை 10 மணிக்கு மதுரை நரிமேடு சி.எஸ்.. கதீட்ரல் பேராலயத்தில் சிறப்பு ஜெபகூட்டத்துக்கு பின் தத்தனேரியில் உள்ள சி.எஸ்.. கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பேராயர் கிறிஸ்டோபர் ஆசீருக்கு ராஜசந்திரகனி என்ற மனைவியும், ஜோதி ஷோபியா என்ற மகளும், ஜெபஜான் ஆசீர், ஜோயல் சாம் ஆசீர் என்ற மகன்களும் உள்ளனர்.
Thanks for reading Christopher Asir Dead

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment