Home » » LIBERATE AMERICAN COLLEGE FROM THE CLUTCHES OF DAVAMANI

LIBERATE AMERICAN COLLEGE FROM THE CLUTCHES OF DAVAMANI

Here is a handbill addressed to the Moderator, Synod of CSI (published by the Christian Community of Madurai Ramnad Diocese) asking him to liberate The American College from the evil clutches of the Davamani. 
Davamani took possession of the college with the help of his father-in-law Late Rev.Christopher Asir and thugs. Even after the death of his father-in-law Davamani is still sitting illegally as the college administrator. He is totally an unqualified and unethical person. He is at present turning students into thugs and making the college unsafe for both the teachers and students.

மதிப்பிற்குரிய மாடரேட்டர் அய்யா அவர்களுக்கு,
வணக்கம்
மதுரை திருமண்டல மக்கள் சார்பாக எங்கள் அன்பான வாழ்த்துக்கள். பேராயர் ஆசிரின் மறைவால் மதுரை திருமண்டலத்திற்கு விமோச்சனம் கிடைத்த்தைப் போல், அமெரிக்கன் கல்லூரிக்கும் விமோச்சனம் கிடைக்க தாங்கள் முயற்சி எடுப்பீர்கள் என்று கர்த்தருக்குள் நம்புகிறோம்.
கல்லூரியைத் திருச்சபையைவிட்டு தனிநபர்கள் எடுத்துக்கொள்வதைத் தடுப்பது எவ்வளவு நியாயமானதோ அதேபோல் தகுதியில்லாதவர்களின் குடும்பச் சொத்தாகவும் அது மாறிவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பது தாங்கள் அறியாத்தல்ல. எவ்வளவோ மூத்த தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருக்க, பேராயர் மருமகன் +2வில் கூட ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெறாத, போலி பி.எச்.டி.,(அதை எழுதி கொடுத்தவர் கேப்ரியல் ஜெயச்சந்திரன்) பட்டம் வைத்துள்ள தவமணி கிறிஸ்டோபரை தேர்ந்தெடுத்தது பிரச்சனையை பன்மடங்கு சிக்கலாக்கியிருக்கிறது. சரி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னாவது அதற்குத் தகுதியுடையவராக நடந்து கொண்டிருக்கிறாரா? மாணவர்களுக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அடியாட்களாக பத்து பதினைந்து மாணவர்களை வைத்துத் தான் கல்லூரியை நடத்துவதாகக் கூறிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து தவமணியின் அடியாட்களை  வெளியிலிருந்து ரவுடிகள் தாக்குவதும், இவர்கள் அவர்களை கம்பு கத்திகளோடு தாக்குவதுமாக வளாகம் வன்முறை மயமாகிக் கொண்டிருக்கிறது. அதில் ஜான் காமராஜ் என்ற ஆசிரியர் ரவுடிகளால் கிறிஸ்மஸ் நகழ்ச்சியன்று தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிறுமாக மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்படட்தையும் தாங்கள் விசாரித்தால் தெரிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம்:
  •  கிறிஸ்டோபர் ஆசிர் அமெரிக்கன் கல்லூரியை மீட்டு திருச்சபைக்குத் தருவேன் என்று சொல்லி தன் மருமகனுக்குக் கொடுத்தது போலவே, மருமகன் கிறிஸ்டோபர் முதல்வரானதும், பர்சாராக நியமிக்க ஒரு சி.எஸ்.. பேராசிரியர் கிடைக்கவில்லையா? செஸ்டர் மேனுவல் என்ற பெந்தைகோஸ்த்தே நபரைத்தான் அருகாமையில் வைத்துள்ளார். இதுதான் கல்லூரியை மீட்கும் லட்சணமா
  • தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரியாக ஆலயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்காத ராப்சன் பெஞ்சமினை வைத்திருக்கிறார்
  • தவமணியின் அரசியல் ஆலோசகராக இருப்பவர், இந்தக்கிறித்தவ கல்லூரி நாசமாகவேண்டுமென்று நீண்ட நாளாக  வேலைசெய்துவரும் சுந்தர்ராஜன் என்ற ஆர்.எஸ்.எஸ். காரர். கல்லூரியின் எந்தப்பொறுப்பிலும் இல்லாத அவருக்கு ஒரு தனிகார் வீட்டுக்கும் கல்லூரிக்கும் அலைந்து கொண்டிருக்கிறது.
  • இப்போது சுயநிதிப்பிரிவில் தவமணியால் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோர் 10 நிமிடம்கூட வகுப்பு நடத்த முடியாதவர்களாக இருப்பதை சொல்லி மாணவர்கள் நகைக்கிறார்கள்.

பாரம்பரியமிக்க அமெரிக்கன் கல்லூரியை நடத்திச் செல்வதற்கான  தகுதியோ, பொறுப்போ, பக்குவமோ, நாகரீகமோ, நேர்மையோ இல்லாத ஒரு மூன்றாம்தர மனிதனாகிய தவமணியிடமிருந்து கல்லூரியை மீடகவேண்டியது தங்களின் தலையாய கடமையாகும்.
தங்கள் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், எங்கள் திருமண்டலத்தை தூய்மைப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையை உருவாக்கி திருச்சபைமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
அதுபோலவே அமெரிக்கன் கல்லூரியின் உண்மைநிலையை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுத்து அதை சீர்செய்வீர்கள் என்று கர்த்தருக்குள் நம்புகிறோம்.
ஜெபத்துடன்,
திருச்சபையார்
மதுரை- ராமநாதபுரம் திருமண்டலம். 



Thanks for reading LIBERATE AMERICAN COLLEGE FROM THE CLUTCHES OF DAVAMANI

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment