Home » » அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தினமணி மதுரை, டிச. 20:

அமெரிக்கன் கல்லூரியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக, பேராயர் கிறிஸ்டோபர் ஆசீரைக் கண்டித்து பேராசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்கன் கல்லூரியில் முதல்வராக இருந்த சின்னராஜ் ஜோசப் ஓய்வுபெற்ற நிலையில், விதிமுறைப்படி கல்வியாண்டு வரையிலான பணி நீட்டிப்பு கோரியிருந்தார். ஆனால், பணி நீடிப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, உதவி முதல்வராக இருந்த அன்புதுரையிடம் அவர் கல்லூரி முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார்.

 இந்த நிலையில், பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் கல்லூரி முதல்வர் அறையை போலீஸார் துணையுடன் திறந்து கைப்பற்றியதாகவும், மோகன் என்பவரை முதல்வராக அறிவித்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

சட்ட விதிமுறையை மீறி, இதுபோன்ற செயல்களில் கிறிஸ்டோபர் ஆசீர் தரப்பினர் ஈடுபட்டு வருவதாக, கல்லூரி முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட முன்னாள் பேராசிரியர்களும், கல்லூரி நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரி வாயிலில் தமிழ்த்துறை பேராசிரியர் அழகேசன் தலைமையில், ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 35 பேராசிரியைகளும் கலந்துகொண்டனர்.

கல்லூரியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பேராயருக்கு துணை போகும், மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், கல்லூரி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

Thanks for reading அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment