Home » » அமெரிக்கன் கல்லூரியில் நடப்பது தெரியாது! கைவிரிக்கிறது அரசு!

அமெரிக்கன் கல்லூரியில் நடப்பது தெரியாது! கைவிரிக்கிறது அரசு!

ஜுனியர் விகடன் மார்ச் 30-03-2011 பக்கம் 17.

FOLLOW-UP பகுதியில் எழுதியவர்: கே. கே. மகேஷ்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பிரச்னை பற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வித்துறையிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் ஒரு மாணவனின் தந்தை.

அதற்கு பதில் அளித்த கல்வித்துறை அதிகாரிகள், ‘ஆட்சி மன்றக் குழுவிந்தலைவரான பிஷ்ப் கிறிஸ்டோபர் ஆசீர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேராசிரியர் மோகனை பொறுப்பு முதல்வராக நியமித்த்ள்ளார். ஆனால், அதற்கான (ஒப்புதல்) ஆணைகள் எதுவும் இந்த அலுவலகத்தில் வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்னை அரசின் பரிசீலனையில் உள்ளதால் மற்ற கேள்விகளுக்கான பதில்களை தற்போது அளிக்க இயலாது’ என்று கூறியுள்ளனர். இந்த பதில், அமெரிக்கன் கல்லூரி பிரச்னையில் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியின் முதல்வராக இருந்த பி.டி.செல்லப்பா, துணை முதல்வர் சாமுவேல் லாரன்ஸ், “இது 1934ம் ஆண்டில் நடைமுறையில் இருந்த சொசைட்டி சட்டத்தின் கீழ் ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனம். கல்லூரியும், அது சார்ந்த சொத்துக்களும் கல்லூரி ஆட்சிமனறக் குழுவிற்குச் சொந்தமானது. 1947-ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபை (CSI) உருவானபோது, ஆட்சிமன்றக்குழுவுக்குத் தலைமை தாங்கும் உரிமை ஒரு கெளரவப் பதவியாக (மட்டுமே) பிஷப்புக்கு வழங்கப்பட்டது. முதல்வர் உட்பட யாரையும் நியமிக்கும் அதிகாரமும் (நீக்கும் அதிகாரமும்) அவருக்குக் கிடையாது.

ஆனால், ஏதோ உள்நோக்கத்துடன், 2008ம் ஆண்டில் முதல்வர் சின்னராஜ் ஜோசப் கல்லூரியில் இருந்தபோதே, துணை முதல்வர் ஜார்ஜ் செல்வக்குமாரை பொறுப்பு முதல்வராக நியமித்தார். அவரது இந்தத் தேவையற்ற செயலால்தான் பிரச்னை உருவானது.

(சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த ஆணை பிஷ்ப்பின் இந்தச்

செயலைக்கண்டித்து, முறையற்றது என தீர்ப்பும் வழங்கியுள்ளது. காண்க:

http://judis.nic.in/judis_chennai/qrydisp.aspx?filename=20120)

தொடர்ந்து மூன்ராவது ஆண்டாக நடந்துவரும் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் மோகனை புதிய முதல்வராக பிஷ்ப் நியமித்திருப்பதாகவும், அதனை அங்கீகரித்து கல்வித் துறை உத்தரவு இட்டுருப்பதாகவும் பொய்யானதகவலை பிஷ்ப்தரப்பினர் கூரினர். அது உண்மைதானா என்பதைக்கூட ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளாமல், மோகனை முதல்வர் நாற்காலியில் அமர, போலீஸார் உதவி செய்தனர் (பிஷ்ப் தரப்பினர் போலீஸ் முன்னிலையில், அவர்கள் துணையுடன், முதல்வர் அறையின் பூட்டை உடைத்து மோகனை புதிய முதல்வராக அமர்த்தினர்).

தற்போது அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிட்டன. அரசுதான் மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க வேண்டும்” என்கிறார்கள்.

இனியாவது நிம்மதி பிறக்கட்டும்.

Thanks for reading அமெரிக்கன் கல்லூரியில் நடப்பது தெரியாது! கைவிரிக்கிறது அரசு!

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment