Home » » வருமானவரித் துறை ஆய்வில் சி.எஸ்.ஐ. கணக்கு வழக்குகள்

வருமானவரித் துறை ஆய்வில் சி.எஸ்.ஐ. கணக்கு வழக்குகள்

¾¢ÉÁ½¢, ÁШà 26 Jan 2011

தென்னிந்திய திருச்சபையின் பல திருமண்டிலங்களிடமிருந்து 2008-09-ம் ஆண்டுக்கான கணக்குகள் குறித்து விவரம் கேட்டு, வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை மற்றும் மதுரை- ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. திருமண்டிலங்கள் சுனாமி நிதி பெற்றிருப்பது மீதான விரிவான அறிக்கையை வருமான வரித்துறை கோரியுள்ளது.

மதுரை - ராமநாதபுரம் திருமண்டிலத்தைச் சேர்ந்த கொடைக்கானல் மற்றும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள சொத்துகள் விவரம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சென்னை, வருமான வரித்துறை துணை இயக்குநர் (டிடிஐடி) வரிவிலக்குப் பிரிவு-1 எஸ்.ஆர். மகாதேவனிடமிருந்து பெறப்பட்டுள்ள கடிதத்தில், இந்த சொத்துகளின் மதிப்பீடு மற்றும் சொத்து விற்பனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில், மதுரை -ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளÐ. மேலும் சர்ச் ஆப் சௌத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் (சிஎஸ்ஐடிஏ), வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி, அதன் அங்கமான பல திருமண்டிலங்களுக்கு அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது. அதுபற்றி வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்ட வருடாந்திரக் கணக்குத் தாக்கல் தொடர்பான அனைத்துப் புகார்கள் மீதும் விரிவான அறிக்கையை அளிக்கும்படியும் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதவிர, நிதி வழங்கிய நன்கொடையாளர்கள் அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்திட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும், அதை அமல்படுத்திய சி.எஸ்.ஐ.டி.ஏ. மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், பல திருமண்டிலங்கள் மற்றும் சிஎஸ்ஐடிஏ-வின் பல துணை அமைப்புகள் தங்களது கல்வி நிறுவனங்கள் அல்லது மற்ற நிறுவனங்கள் என்ற வகையில் நன்கொடையாக நிதி பெற்றிருந்து, அந்த நிதி மொத்தக் கணக்கில் காட்டப்படாத பட்சத்தில், அதுபற்றிய அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும், அத்துடன் சிஎஸ்ஐடிஏ-வின் குழு உள்பட அனைத்துத் துணை அமைப்புகளின் வங்கிக் கணக்குப் புத்தகங்களின் நகல் ஆகியவற்றையும் வருமான வரித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வங்கிக் கணக்குகள் ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம், அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் நில நடுக்கம் நிவாரண நிதியாக மத்திய கேரள திருமண்டிலம் மூலம் பெறப்பட்ட நிதியும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. இத் திருமண்டிலமானது அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனத்திற்காக பெறப்பட்ட தொகையைப் பற்றிய விரிவான விவரத்தையும், அது எவ்வாறு கணக்கில் வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விளக்கத்தையும் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக வடக்கு திருமண்டிலம், வெளிநாட்டு நிதி உதவியுடன் கட்டிய வர்த்தக கட்டடத்தில் இருந்து பெறப்படும் வாடகை எந்த வகையில் செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியும், வருமான வரித் துறையின் வரிவிலக்குப் பிரிவு துணை இயக்குநர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். மேலும்,இந்தச் செலவினங்கள் எவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கோவை திருமண்டிலத்தைப் பொறுத்தமட்டில், அத்திருமண்டிலத்தின் வருடாந்திர தணிக்கை அறிக்கையையும், அத்தணிக்கை அறிக்கை ஆட்சிமன்றக் குழுவால் எந்தத் தேதியில் ஒப்புதல் பெறப்பட்டது என்ற விவரத்தையும் செலவு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறும், சிஎஸ்ஐடிஏ-வின் பொருளாளருக்கு வருமான வரித் துறையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Thanks for reading வருமானவரித் துறை ஆய்வில் சி.எஸ்.ஐ. கணக்கு வழக்குகள்

« Previous
« Prev Post

0 comments :

Post a Comment